தாக்குதலுக்கு முன் புலனாய்வு அதிகாரிகளை கணவர் சந்தித்ததாக சஹ்ரானின் மனைவி வாக்குமூலம் 

#Parliament #Harin Fernando
Prathees
4 years ago
தாக்குதலுக்கு முன் புலனாய்வு அதிகாரிகளை கணவர் சந்தித்ததாக சஹ்ரானின் மனைவி வாக்குமூலம் 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் தனது கணவர் புலனாய்வு அதிகாரிகளை பலமுறை சந்தித்ததாக சஹ்ரானின் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்போது சஹ்ரானின் மனைவி வழங்கிய அறிக்கையின் பிரதியை பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்  ஹரின் பெர்னாண்டோ பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“சஹ்ரானின் மனைவி உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேட்டுக்கொள்கிறோம்.

 ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல்களுக்கு முன்னதாக உளவுத்துறை அதிகாரிகளை சஹ்ரான் சந்தித்தார் என்பதை நிரூபிக்க எங்களிடம் ஆதாரம் உள்ளது. சஹாரானின் மனைவி தனது அறிக்கையில் இதை உறுதி செய்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4