காரைநகா் பிரதேச சபைக்கான புதிய தவிசாளா் தொிவு நாளை!

#Jaffna
Prasu
4 years ago
காரைநகா் பிரதேச சபைக்கான புதிய தவிசாளா் தொிவு நாளை!

யாழ்., காரைநகா் பிரதேச சபைக்கு புதிய  தவிசாளரைத் தொிவுசெய்வதற்கான கூட்டம் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

காரைநகா் பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளா் மாியதாஸ் பற்றிக் நிறஞ்சன் தலைமையில்  இடம்பெறும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் (ரெலோ கட்சியை ) பிரதி நிதித்துவப்படுத்தி 2018ஆம் ஆண்டு முதல் தவிசாளராக இருந்த விஜயதா்மா கேதீஷ்வரதாஸ் கடந்த மாதம் 21ஆம் திகதி கொரோனாத் தொற்று நோய் காரணமாக  யாழ். போதனா வைத்தியசாலையில் மரணமானாா்.

இதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே புதிய தவிசாளரைத் தோ்வு செய்வதற்கான நாளைய கூட்டத்தில்  சுயேட்சை (மீன் சின்னம்) கட்சி சாா்பாக 3 உறுப்பினா்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) சாா்பாக 2 உறுப்பினா்களும், ஐக்கிய தேசியக் கட்சி சாா்பாக 2 உறுப்பினா்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள் சின்னம்) சாா்பாக ஓர் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினா் சாா்பாக 3 உறுப்பினா்களுமாக மொத்தம் 11 போ் இடையே தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4