ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியை உயிரிழப்பு

#Sri Lanka Teachers #Protest #Death
Keerthi
4 years ago
ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியை உயிரிழப்பு

தெனியாய − கொட்டப்பொல பகுதியில் இன்று (09) ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியை ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 27 வயதான குறித்த ஆசிரியைக்கு, 13 வயதிலேயே அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சுகயீனம் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் என கூறிய போதிலும், இவர் ஆர்ப்பாட்டத்தில் இன்று கலந்துக்கொண்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4