பிரதமரிடம் கேள்வி கேட்க நாளை முதல் சந்தர்ப்பம்

#Mahinda Rajapaksa
Prasu
4 years ago
பிரதமரிடம் கேள்வி கேட்க நாளை முதல் சந்தர்ப்பம்

ஆளும் கட்சி மாத்திரமன்றி, எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதமரிடம் இரண்டு கேள்விகள் விகிதம் கேட்டு, அவரிடமிருந்து பதிலை பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் நாளை  முதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்.

கொவிட் பரவல் காரணமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படாததை அடுத்தே, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போயிருந்தது.

இந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தை நாளைய தினம் முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4