இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால் இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும்

Keerthi
4 years ago
இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால் இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும்

இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால், இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் 10.59 மணி வரை தூங்குவதுடன் ஒப்பிடும்போது இரவு 11 மணி முதல் 11.59 மணி வரை 12 விகிதத்திற்கும் அதிகளவிலான ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரவு 10 மணிக்கு முன்னர் தூங்கினால் இதய நோய் வருவதற்கான 24 விகிதத்திற்கும் அதிகளவிலான ஆபத்து இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நள்ளிரவில் அல்லது அதற்குப் பின்னர் தூங்குவதால் இருதய நோய்க்கான ஆபத்து 25% அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 மற்றும் 2010 க்கு இடையில் 88 ஆயிரத்து 26 பேரை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிகரித்த இருதய ஆபத்து பெண்களுக்கு அதிகளவில் இருப்பதைக் கண்டறிந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4