சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
பதுளை, மாத்தளை,முல்லைத்தீவு, புத்தளம், குருநாகல்,கேகாலை மற்றும் காலி ஆகிய இடங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக 17 மாவட்டங்களில் உள்ள 105 பிரதேச செயலகங்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், 8820 குடும்பங்களைச் சேர்ந்த 23,638 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் 18 வீடுகள் முழுமையாகவும் மேலும் 960 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட 385 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1671 பேர் தற்போது 19 தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று இரவு 09.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.