நாடளாவிய ரீதியில் மண்ணெண்ணெய்க்கு பாரிய தட்டுப்பாடு - அமைச்சர் அறிவிப்பு

Reha
2 years ago
நாடளாவிய ரீதியில் மண்ணெண்ணெய்க்கு பாரிய தட்டுப்பாடு - அமைச்சர் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் அண்மைக் காலமாக மண்ணெண்ணெய் தேவை இரட்டிப்பாகியுள்ளது எனவும், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இல்லாத பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்வது கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் சுமார் 550 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

72 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என்ற கட்டுக்கதை ஒன்று பரவியதால் அதிகளவில் மண்ணெண்ணெயை மக்கள் கொள்வனவு செய்தமையாலேயே பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இல்லாத பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பது கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!