நந்திக்கடலில் இயற்கையாக ஏற்பட்ட மாற்றம்

#SriLanka
நந்திக்கடலில் இயற்கையாக ஏற்பட்ட மாற்றம்

சீரற்ற காலநிலையை அடுத்து, நந்திக்கடலுக்கும், பெருங்கடலுக்கும் இடையில் காணப்படுகின்ற மணல் திடல் இயற்கையாகவே உடைப்பெடுத்து நந்திக்கடல் நீர் பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.

நேற்றைய தினம், நந்திக்கடலினை அண்டியிருந்த வயல் நிலங்கள் நீரில் மூழ்கியதுடன், வட்டுவாகல் பாலத்திற்கு மேல் நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்திருந்ததால், வட்டுவாகல் பாலத்தினால் போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் நேற்று இரவு நந்திக்கடல் இயற்கையாகவே, உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.

நந்திக்கடல் நீரை பெருங்கடலுடன் இணைத்து நந்திக்கடலின் நீர்மட்டத்தை குறைக்குமாறு விவசாயிகளும், வட்டுவாகல் பகுதி மக்களும் உரியவர்களிடம் கோரிக்கைவிட இருந்தனர்.

எனினும், நத்திக்கடல் இயற்கையாவே பெருங்கடலுடன் நேற்று இரவு சங்கமித்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4