விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து விவசாயம் செய்ய வைக்க என்னால் முடியும் - கோட்டாபயவின் கருத்திற்கு எழுந்தது கண்டனம்!

Reha
4 years ago
விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து விவசாயம் செய்ய வைக்க என்னால் முடியும் - கோட்டாபயவின் கருத்திற்கு எழுந்தது கண்டனம்!

இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து சேதனப்பசளையைப் பயப்படுத்தி விவசாயம் செய்ய வைக்க என்னால் முடியும் என்று கோட்பாய ராஜபக்ஸ தெரிவித்திருப்பதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இத்தகைய சிந்தனைகள் தமிழ்த் தேசிய இனத்திற்கான தீர்வினைப் பெற்றுத்தரும் ஜனநாயகப் பாதையில் இருந்து சிங்களப் பேரினவாதம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதையும் எடுத்துக்காட்டுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் கலாநிதி இ.சிறீஞானேஸ்வரன்  ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவ ஆட்சி தொடர்பில் கோட்டாபய கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும் தான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என்ற எதிர்பார்த்தே மக்கள் தனக்கு வாக்களித்தாகவும், ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களைக் கழுத்தைப் பிடித்து ஆட்சி செய்ய முடியும், ஆனால் தான் அப்படி இல்லை என்றும் தெரிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகையான மனநிலை ஒருபோதும் தமிழ்த் தேசத்தின் மக்களுக்குத் தீர்வைக்கொண்டு வரப்போவதில்லை என்பதுடன் சிங்கள தேசத்து மக்களையும் இராணுவக் காட்டாட்சிக்குள் கொண்டுவரும் மனநிலையையே பிரதிபலிப்பதாக உணர முடிகின்றது.

பொருளாதார பிரச்சனைகளைக் கடுமையாக எதிர்கொண்டுள்ள மக்கள் தற்போதைய அரசின் மீது நெருக்கடியை ஏற்படுத்தத் துணிவர் என்பதைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி கோட்டாபய ராசபக்ச முன்னெச்சரிக்கையாக இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

அதனை நியாயப்படுத்துவதற்காக தான் இராணுவ ஆட்சியைக் கொண்டுவரக்கூடியவர் என்று தெரிந்தே மக்கள் தனக்கு வாக்களித்தனர் என்பதைச் சொல்வதன் ஊடாக மக்கள இராணுவ ஆட்சிக்குத் தயாராக இருப்பதான தோற்றப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றார்.

இவ்வாறான மனநிலை தமிழ் மக்களின் வாழ்வியலைக் கடுமையாக குழப்பப்போவதுடன் அவர்களை அச்சப்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4