சிறுவர்கள் மனநோய்க்கு உள்ளாகும் நிலை அதிகரிப்பு
குழந்தைகள் வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்படுவதால் சில மனநோய்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் வீடுகளுக்கு சிறுவர்களுக்கு உகந்த சூழல் ஒன்றை ஏற்படுத்த பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
பல்வேறு மனநிலைகளில் இருந்து சிறுவர்களை பாதுகாக்க அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவது அத்தியாவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில்இ ஏராளமான குழந்தைகள் சில மனநல நிலைமைகளால் பாதிக்கப்பட்டு
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தார்கள்.
பாடசாலைகளுக்கு செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலையே இதற்கு முக்கிய காரணம்.இந்த குழந்தைகள் போன், இன்டர்நெட் மற்றும் பிற விளையாட்டுகளுக்கு அடிமையாகி மனதளவில் பலவீனமடைந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த குழந்தைகள் பல்வேறு தவறான செயல்களை செய்ய ஆசைப்படுகின்றனர்.
மனநலக் கோளாறுகள் காரணமாக தங்கள் உயிரைக் கூட எடுக்க முயற்சித்த நிகழ்வுகளை அறிந்திருக்கிறோம்.
இந்நிலையைத் தடுக்கும் ஆற்றல் பெற்றோருக்கு உண்டு. வீட்டுச் சூழலை குழந்தைகளுக்கு ஏற்றதாக வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனியுங்கள் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதும் பெற்றோரின் பொறுப்பாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.