வீட்டை விட்டு ஓடிய மூன்று சிறுமிகளுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
கெசல்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன மூன்று வயதுடைய சிறுமிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெசல்வத்தை பொலிஸார் 3 சிறுமிகளையும் கொழும்பு மேலதிக நீதவான் சந்திமா லியனகே முன்னிலையில் இன்று (10) ஆஜர்படுத்தினர்.
பொலிஸாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், மூன்று சிறுமிகளையும் பத்திரப்பதிவின் கீழ் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
கொழும்பு 12 இல் இருந்து திங்கட்கிழமை காணாமல் போன மூன்று சிறுமிகள் நேற்று (9) மாலை வீடு திரும்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று சிறுமிகளும் பெற்றோருக்கு தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினால், பத்திரம் ரத்து செய்யப்பட்டு, குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்படும் என்று நீதவான் கடுமையாக எச்சரித்தார்.
குறித்த வழக்கு எதிர்வரும் 16ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொழும்பு 12 ஐச் சேர்ந்த சிறுமிகளான பாத்திமா ரக்ஸா (15), அவரது சகோதரி பாத்திமா கதேரா (13) மற்றும் கம்பளையைச் சேர்ந்த உறவினர் பாத்திமா வர்யா (13) ஆகியோர் திங்கட்கிழமை காலை வீட்டை விட்டுச் சென்றதாகவும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்றும் கெசல்வத்தை பொலிஸில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டது.