பண்டோரா விசாரணையின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கம்
பண்டோரா ஆவணம் மூலம் அம்பலப்படுத்தப்பட்ட இலங்கையர்களின் பெயர்கள் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இது குறித்து விசாரணை நடத்தியது.
பண்டோரா ஆவணத்தில் வெளியாகியுள்ள இலங்கையர்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி திணைக்களத்திற்கு அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தார்.
திருகுமார் நடேசனின் வங்கிக் கணக்கு விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களில் இருந்து தற்போது கிடைத்து வருவதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உரிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நிறைவடையாததால், சம்மன் அனுப்பப்பட்ட அறிக்கைகள் மற்றும் பிற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இறுதி அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.