'பேய்'யெனப் பெய்யும் மழை.... கவிதை
Ravi
3 years ago

'பேய்'யெனப் பெய்யும் மழை..
மழையே நீ மழையெனப்பெய் ...
பிழையெனப்பெய்யாதே
அழகாய் பெய் ...
அழிவாய் பெய்யாதே
மெல்லமாய் பெய்
வெள்ளமாய் பெய்யாதே
வேண்டுமென்றால் மட்டும் பெய்
இப்படி
வேண்டுமென்றே பெய்யாதே
மண் நனைய பெய் - எம்
கண் நனைய பெய்யாதே
மேட்டுக் காடுகள் விளைய பெய்
வீட்டு முகடுகள் வளைய பெய்யாதே
முற்றத்து மலர்கள் விரிய பெய்
வக்கற்று ஒடிந்து நடுங்கப்பெய்யாதே
ஆறுகுளங்கள் நிறைய பெய்
அழகிய வீதிகள் மறைய பெய்யாதே
தாராளமாய் பெய்
ஏராளமாய் பெய்யாதே
அளவு கடந்து போவதால்
வளவு நிறைந்து மேவுது
அத்திவாரம் தாண்டி வந்து
அறைகள் ஈரம் ஆகுது
வேண்டுமென்றால் மட்டும் பெய்
இப்படி
வேண்டுமென்றே பெய்யாதே
மழையே நீ....
பெய்யெனப் பெய்
'பேய்'யெனப் பெய்யாதே..
செல்வம்
கனடா

chennai airport
வானம் கரைந்ததால் விமானம் உறைந்தது



