நாடு மீண்டும் கொவிட் ஆபத்தை சந்தித்தால் மீண்டும் முடக்கப்படும் - ஜனாதிபதி

Reha
2 years ago
நாடு மீண்டும் கொவிட் ஆபத்தை சந்தித்தால் மீண்டும் முடக்கப்படும் - ஜனாதிபதி

நாட்டில் போராட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளினால் நாடு மீண்டும் கொவிட் ஆபத்தை சந்தித்தால் நாடு மீண்டும் முடக்கப்படும். என்பதை எதிர்கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். 

உலக விஞ்ஞான தினத்தையொட்டி, தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வார நிகழ்வு, அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார், 

இதன்போது மேலும் அவர் கூறியுள்ளதாவது, நாடு திறக்கப்பட்டு பொதுமைப்படுத்தலின் கீழ் சகல செயற்பாடுகளும் வழமைக்கு திரும்யிருக்கின்றது. இருப்பினும், போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்  உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம். இதனால், பொதுமக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!