வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

#Death
Prathees
4 years ago
வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (10) அனுராதபுரம்இ மிஹிந்தலை வீதிஇ நரியங்குளம சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மின்கம்பிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் மரங்களை ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பற்ற முறையில் அகற்றும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும் சைக்கிளில் பயணித்தவரும் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் உஸ்வெவஇ பஹலகம பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கெபிதிகொல்லாவ மற்றும் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 18 மற்றும் 30 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4