நாடு முழுவதும் 110 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை

Keerthi
4 years ago
நாடு முழுவதும் 110 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்தது.

கடந்த மாதம் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியது. இந்த சாதனை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்பின் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை நேற்று 110.74 கோடியை தாண்டியது. இத்தகவலை மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நேற்று 48.75 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4