இந்திய மீனவர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Prasu
4 years ago
இந்திய மீனவர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

அண்மையில் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (12) இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்தே பருத்தித்துறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் 23 பேர் சார்பிலும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி லோ.குகதாஸ் ஆஜராகியிருந்தார்.

கைது செய்யப்பட்ட 23 மீனவர்களுக்கெதிராகவும் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டமை, தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன் படுத்தக்கூடிய நிலையில் வைத்திருந்தமை, அனுமதி பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டமை போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்வரும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

மீனவர்கள் வழக்கு விசாரணைகளுக்கு யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.

இந்திய மீனவர்களுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டத்தரணி ஜோய் மகாதேவாவும் ஆஜராகியிருந்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4