மன்னாரில் விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடிய  அறுவர் கைது

#Arrest #Mannar
Prathees
4 years ago
மன்னாரில் விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடிய  அறுவர் கைது

 

மன்னாரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தங்கத்தை தேடி அகழ்வு நடவடிக்கையை முன்னெடுத்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுத்தகாலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் தங்கத்தைத் தேடியே குகுறித்த நபர்கள் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் ஓலைத்தொடுவாய் காப்புக்காட்டில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் தங்கத்தை தேடும் நோக்கில் குழுவொன்று அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று(13) மாலை பொலிஸாரும் 4 ஆவது படைப் பிரிவினரும் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்தே சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மின்பிறப்பாக்கி உள்ளிட்ட உபகரணங்களைக் பொலிஸார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட நப்கள் ஹெட்டிமுல்ல, கொட்டியாகும்புர,பாணந்துறை, பொரலந்த மற்றும் ஹல்பே பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 60 வயதுக்கிடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4