25.36 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு

Prasu
4 years ago
25.36 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25.36 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 25,36,53,615 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,93,65,961 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 51 லட்சத்து 10 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,91,77,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 77,579 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

  • அமெரிக்கா  - பாதிப்பு- 4,78,89,783, உயிரிழப்பு -7,83,420,    குணமடைந்தோர் - 3,78,97,304   
  • இந்தியா        -  பாதிப்பு-3,44,26,774,  உயிரிழப்பு -  4,63,245,  குணமடைந்தோர் - 3,38,26,483
  • பிரேசில்        -  பாதிப்பு -2,19,53,838, உயிரிழப்பு -  6,11,255, குணமடைந்தோர் - 2,11,46,255    
  • இங்கிலாந்து- பாதிப்பு - 95,24,971,  உயிரிழப்பு -  1,42,835,  குணமடைந்தோர் -77,92,578 
  • ரஷ்யா           -  பாதிப்பு - 90,31,851,  உயிரிழப்பு -  2,54,167,  குணமடைந்தோர் -   77,54,764      

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

பிரான்ஸ்     -  72,75,149
ஈரான்          - 60,31,575
அர்ஜெண்டினா- 53,05,151
ஸ்பெயின்       - 50,47,156
கொலம்பியா -  50,29,335
ஜெர்மனி         - 50,09,388
இத்தாலி          - 48,52,496
இந்தோனேசியா- 42,50,516
மெக்சிகோ     - 38,41,661

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4