WCT20 FINAL - அவுஸ்திரேலியா அணிக்கு 173 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Prasu
4 years ago
WCT20 FINAL - அவுஸ்திரேலியா அணிக்கு 173 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு நியூசிலாந்து அணி 173 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 85 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஹேசில்வுட் அதிகபட்சமா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா அணி சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 9 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4