எனது ஓய்வூதிய ஊதியத்தை குறைத்து பட்ஜெட்டை ஈடுகட்ட முடியுமா?

#Maithripala Sirisena #Budget 2022
Prathees
4 years ago
எனது ஓய்வூதிய ஊதியத்தை குறைத்து பட்ஜெட்டை ஈடுகட்ட முடியுமா?

முன்னாள் ஜனாதிபதியான தனது  ஓய்வூதியத் தொகை 95,000 ரூபாவைக் கழிப்பதன் மூலம் வரவு செலவுத் திட்டத்திற்கு  தீர்வு காண முடியுமானால் மகிழ்ச்சியடைவேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஒரு ஜனாதிபதி தனது ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு 10 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான நகைச்சுவைகளை கண்டு தாம் அசைக்கப்படமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி கண்டி பேராதனை சுபோதாராம விகாரையில் நான்கு மாடிகளைக் கொண்ட பிக்கு கல்வி நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மைத்திரிபால சிறிசேன பதிலளிக்கும்போது, தனது ஓய்வூதியத்தை குறைத்து,  மக்களுக்கு நிவாரணம் வழங்கினால் மகிழ்ச்சி அடைவேன் என தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4