நடத்துனர்களின்றி தனியார் பேருந்துகளை இயக்க திட்டம்

Prabha Praneetha
4 years ago
நடத்துனர்களின்றி தனியார் பேருந்துகளை இயக்க திட்டம்

2022 ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடத்துனர்கள் இல்லாமல் தனியார் பேருந்துகளை இயக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் பேருந்துகளில் கிடைக்கும் வருமானத்தில் இரண்டு ஊழியர்களை பராமரிப்பது கடினம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி ஓம்னி எனப்படும் முற்கொடுப்பனவு அட்டையை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்வது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஏற்கனவே கலந்துரையாடல்களையும் முன்னெடுத்துள்ளார்.

எரிப்பொருள் விலை அதிகரிப்பு,உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பற்றாக்குறை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4