நான் யதார்த்தமான உண்மையைப் பேசுகிறேன், என் வாயை யாரும் மூட முடியாது! - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Reha
4 years ago
நான் யதார்த்தமான உண்மையைப் பேசுகிறேன், என் வாயை யாரும் மூட முடியாது! - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் மணல் முதல் சீனி வரை அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வண.முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

விவசாய சமூகத்தின் நம்பிக்கை இறுதிவரை நிறைவேறவில்லை. இதனால் எம்.பி.க்கள் கிராமத்திற்கு செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக முருத்தெட்டுவே தேரர் மேலும் தெரிவித்தார்.

எம்.பி.க்களுக்கு கிராமத்தில் பேச வாய்ப்பு கிடைக்குமா? அல்லது மக்கள் விரட்டி விடுவார்களா என்ற சந்தேகம் தமக்கு இருப்பதாக கூறினார்.

மேலும், பதவி வழங்கப்பட்ட பின்பும் அரசாங்கத்தை விமர்சிப்பது பிரச்சினை இல்லையா என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,

இலங்கை முழுவதையும் என்னிடம் ஒப்படைத்தாலும் என் வாயை மூட யாரும் இல்லை. நான் யதார்த்தமான உண்மையைப் பேசுகிறேன். இந்தப் பதவிகளைப் பாதுகாக்க நான் விரும்பவில்லை. நான் அதை விட நம் நாட்டையும் மக்களையும் மதிக்கிறேன் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4