தந்தையை இரும்புக்கம்பியால் தாக்கிக் கொலை செய்த மகன்

#SriLanka
தந்தையை இரும்புக்கம்பியால் தாக்கிக் கொலை செய்த மகன்

மனநலம் பாதிக்கப்பட்ட நபர், தனது தந்தையை இரும்புக் கம்பியால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் குருநாகல், பனாகமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் பனாகமுவ, கோபாலகெதர பிரதேசத்தை சேர்ந்த 62 வயது நபரே மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயது நபரைக் கைதுசெய்துள்ள போகஸ்வௌ பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4