'பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல்' - உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம்

#world_news
'பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல்' - உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம்

கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல். இதை உலக நாடுகள் தடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வளர்ந்த நாடுகளில் கையாளப்படும் கொரோனா தடுப்பூசி நிலைவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்  அதானோம் கூறுகையில், 

“வருமானம் குறைந்த  நாடுகளில் போடப்படும் முதல் டோஸ் தடுப்பூசியை காட்டிலும், வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 6 மடங்குக்கும் அதிக அளவில் கொரோனா தடுப்பூசியின்  பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்படுகின்றன.

கொரோனா தடுப்பூசி உலகின் அனைத்து பகுதிகளுக்கும்  சென்றடைய வேண்டும். ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்ட பின், குறைந்தது ஒரு வருடத்திற்கு பின்னர்,  பூஸ்டர் டோஸ்கள் பற்றி வளர்ந்த நாடுகள் முடிவெடுக்கலாம். அதுவரை பூஸ்டர் டோஸ் போடுவதை நிறுத்தி வைக்க வேண்டும்.

ஏழை நாடுகளில் முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள் மற்றும்  இணை நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஆரோக்கியமான நபர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுவது தற்போதைக்கு பிரதான விடயம் அல்ல.

எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதை விட , யாருக்கெல்லாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது தான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்” என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4