180 மில்லியன் ரூபா பெறுமதியான கொகேய்னுடன் டுனீசிய நாட்டு பெண் கைது

#Arrest #Airport
Prathees
4 years ago
180 மில்லியன் ரூபா பெறுமதியான கொகேய்னுடன் டுனீசிய நாட்டு பெண் கைது

சர்வதேச நிறுவனமொன்றின் தலைவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் இன்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொகேய்னுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

59 வயதுடைய டுனீசிய நாட்டு பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 180 மில்லியன் ரூபா பெறுமதியான 4 1/2 கிலோ கிராம் கொகேய்னுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் டுனீசியாவில் இருந்து பிரேசிலுக்கு பயணித்து, அங்கிருந்து டோஹாவிற்கு சென்று பின் இலங்கையை வந்தடைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட கொகேய்னுடன் குறித்த பெண்ணை, போதைப் பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4