கேஸ் சிலிண்டர் தருமாறு கோரி லொறியின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த பெண்

#Protest #Laugfs gas #Litro Gas
Prathees
4 years ago
கேஸ் சிலிண்டர் தருமாறு கோரி லொறியின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த பெண்

எரிவாயு சிலிண்டர் தரவில்லை என்று கூறி, எரிவாயு ஏற்றிச் செல்லும் லொறியின் முன் தரையில் அமர்ந்து பெண் ஒருவர் போராட்டம் நடத்தியுள்ளார்.

வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக பெண் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட எரிவாயு விற்பனை நிறுவனத்தின் உரிமையாளரால் விற்பனைக்கு  போதுமான எரிவாயு இல்லை என்று அந்தப் பெண்ணிடம் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து அந்த பெண் எரிவாயு லொறியின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

சம்பவத்தையடுத்து வாத்துவ பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணுக்கு எரிவாயு சிலிண்டர் தருவதாக  உரிமையாளர் உறுதியளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4