இடைநிறுத்தப்பட்ட வடக்கு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

#Travel
Prathees
2 years ago
இடைநிறுத்தப்பட்ட வடக்கு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்தின் நீண்ட தூர ரயில் சேவைகள், நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் (16 மற்றும் 17) ஆறு நீண்ட தூர ரயில்கள் வடக்கு மார்க்கத்தில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

நாளைய  ரயில் அட்டவணை 

  • கல்கிசை - காங்கேசன்துறை கடுகதி ரயில் (கொழும்பு கோட்டையில் இருந்து காலை 5.45க்கு புறப்படும்)
  • காங்கேசன்துறை - கல்கிசை கடுகதி ரயில் (காங்கேசன்துறையில் இருந்து மதியம் 13.15க்கு புறப்படும்)
  • கல்கிசை - காங்கேசன்துறை யாழ்தேவி ரயில் (கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 6.35க்கு புறப்படும்)
  • காங்கேசன்துறை - கல்கிசை யாழ்தேவி ரயில் (காங்கேசன்துறையில் இருந்து இரவு 9.00க்கு புறப்படும்)

நாளை மறுதினத்துக்கான (17) ரயில் அட்டவணை

  •  கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை (கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் நேரம் 11.50) 
  • காங்கேசன்துறை - கொழும்பு கோட்டை நகரங்களுக்கிடையேயான ரயில் (காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 புறப்படும்)