ஞானசார தேரரை தலைவராக்குவது முட்டாள்தனமான விடயம்: டிலான் பெரேரா

#Gnanasara Thero
Prathees
4 years ago
ஞானசார தேரரை தலைவராக்குவது முட்டாள்தனமான விடயம்: டிலான் பெரேரா

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குழுவின் தலைவராக நியமித்தமை முட்டாள்தனமான செயல் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளைஇ அடம்பிட்டியவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார். இது முற்றிலும் முட்டாள்தனம்.

தேரர் செய்த சில தவறுகள் இருக்கலாம் அந்த தவறுகளுடன் குழுவின் தலைவர் பதவிக்கு தேரருக்கு பொருத்தமானவர் அல்ல.

துறவிகளில் சிலர் உண்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களும் அப்படிப்பட்ட குழுவின் தலைவராக இருக்க தகுதியானவர்கள் அல்ல. அந்த நியமனம் முட்டாள்தனமானது எ அவர் மேலும் குறிப்பட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4