நடிகை அம்பிகா பிறந்த நாள் 16-11-2021
அம்பிகா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். இவர் 1978 முதல் 1989 வரையிலுள்ள காலகட்டங்களில் முன்னணி நடிகை ஆவார்.
இவர் 1962-ம் ஆண்டு குஞ்சன் நாயர் மற்றும் சரஷ்சம்மா என்பவர்களுக்கு மகளாக கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்துள்ளார். இவரது தாய் 2014-ம் ஆண்டின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார். மேலும் அம்பிகாவிற்கு ராதா மற்றும் மல்லிகா என்ற இரு சகோதிரிகளும், அர்ஜுன் சுரேஷ் என்ற இரு சகோதர்களும் உள்ளனர்.
இவர் 1988-ம் ஆண்டு சின்னு ஜான் என்பவரை திருமணம் புரிந்து இரு மகன்களுடன் அமெரிக்காவில் வாழ்துவந்துள்ளார். பின்னர் 1997-ம் ஆண்டு விவாகரத்து பெற்று இந்திய திரும்பிய இவர், 2000-ம் ஆண்டில் ரவிகாந்த் என்னும் நடிகர் ஒருவரை மறுமணம் புரிந்து இவர் 2002-ம் ஆண்டு இவருடனும் விவாகரத்து பெற்று தற்போது சென்னையில் இவரது மகன்களுடன் வாழ்துவருகிறார்.
இவர் 1979-ம் ஆண்டு சக்களத்தி திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார். பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் 1997-ம் ஆண்ட முதல் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடரிலும், விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நா.1, ஜீ தொலைக்காட்சியில் ஜீ டான்ஸ் லீக், டான்சிங் கில்லாட்டிஸ் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றிவருகிறார்.