அழுகிய நிலையில் 40 ஆயிரம் கிலோ உருளைக்கிழக்கு தம்புள்ளையில் கைப்பற்றப்பட்டன

#Arrest
Prathees
4 years ago
அழுகிய நிலையில் 40 ஆயிரம் கிலோ உருளைக்கிழக்கு தம்புள்ளையில் கைப்பற்றப்பட்டன

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, பாவனைக்கு உதவாத உருளைக்கிழங்கு கொண்ட கன்டெய்னர் வாகனத்தை  தம்புள்ளை மாநகர சபையின் சுகாதார பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர்.

தம்புள்ளை பொருளாதார நிலையத்திற்கு அருகில்தனியார் களஞ்சியசாலையொன்றில் குறித்த 

தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாதவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் களஞ்சியசாலையில் கண்டெய்னர்  வண்டியில் உருளைக்கிழங்கு தொகையை  மாநகர சபை சுகாதார திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.

உருளைக்கிழங்குகளில் முளைத்திருந்த தளிர்களை உடைத்து அதனை விற்பனை செய்வதற்கு தயார்படுத்திக் கொண்டிருந்த வேளை கண்டுபிடிக்கப்பட்டதாக தம்புள்ளை மேயர் குறிப்பிட்டுள்ளார்.

கன்டெய்னரில் 40,000 கிலோவுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு இருந்ததாகவும், அவை அனைத்தும் அழுகியதாகவும், சில உருளைக்கிழங்குகள் துளிர்விட்டதாகவும் நகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

உருளைக்கிழங்குத் தொகையை தம்புள்ளைக்கு கொண்டு வந்த கன்டெய்னர்  சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதியிடம் இருந்து ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4