காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில்  மர்மமான தடயம்

#Police
Prathees
4 years ago
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில்  மர்மமான தடயம்

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் ஒருவர் குதித்திருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் நோர்வூட் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நீர்த்தேக்கத்திற்கு அருகில் கையடக்கத் தொலைபேசி மற்றும் ஒரு ஜோடி காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நீர்த்தேக்கத்தில் நீராட வந்த குழுவினர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சோதனையிட்ட போது ஒரு ஜோடி காலணி மற்றும் கைத்தொலைபேசி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த தொலைபேசி மற்றும் காலணிகள் நோர்வூட் தோட்டத்தின் மேல் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய நபருடையது என பின்னர் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நோர்வூட் பொலிஸில் இன்று காலை முறைப்பாடு செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், காசல்ரீ நீர்த்தேக்க மீனவர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் குறித்த இளைஞன் நீர்த்தேக்கத்தில் குதித்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4