வடமாகாண மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Reha
4 years ago
வடமாகாண மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வடமாகாணத்திற்கும் புத்தளம், அனுராதபுரம், திருகோணமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் 01 மணி முதல் நாளை பிற்பகல் 01 மணி வரையான காலப்பகுதிக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் மேற்குறித்த பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் ஆரிவுறுத்தியுள்ளது.

மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை நாளை 18ம் திகதி அடைய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட மாகாணத்தின் சில இடங்களிலும் புத்தளம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4