கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

#Kilinochchi #Murder #Police
Prathees
4 years ago
கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சியில் வெட்டுக்கயங்களுடன் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி - பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகை ஒன்றுக்குள் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலை அயலவர்களால் அவதானிக்கப்பட்டு, பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பரந்தன் சிவபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை எனவும் இவர் குடும்பத்தகராறு காரணமாக குடும்பத்தில் இருந்து நீண்ட காலமாக பிரிந்து வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தில் முகத்தின் மீது கடுமையான வெட்டுக்காயங்கள் காணப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4