50வது நாள்வரை கடினமான போட்டியாளர் யார்?

Prabha Praneetha
4 years ago
50வது நாள்வரை கடினமான போட்டியாளர் யார்?

பிக் பாஸ் சீசன் 5 ல் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கமல்ஹாசன் அடிக்கடி கூறுவார். அந்த வகையில் நேற்று யாரும் எதிர்பாராத விதமாக மக்களால் வெளியே அனுப்பப்பட்ட போட்டியாளர் அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

சனிக்கிழமையான இன்று பார்வையாளர்களின் கைத் தட்டல்களோடு அரங்கத்திற்குள் நுழையும் ஆண்டவர் ரசிகர்களிடம் 50 நாட்களை நெருங்கி இருக்கிறோம் உங்களுடைய கணிப்பில் இந்த சீசன் என்று கேள்வி எழுப்புகிறார்.

இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் ஆண்டவரின் கேள்விக்கு ஆர்வமாக பதிலளிக்கின்றனர். ஒருவர் இந்த சீசனின் கடுமையான போட்டியாளர் ராஜு என்று கூறுகிறார். மற்றொருவர் ராஜு, சிபி, வருண் அனைவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் ஸ்ட்ராங்காக இருப்பதாக கூறுகிறார்.

மேலும் அபிஷேக் வீட்டிற்குள் வருவதற்கு முன்பு இருந்த பிரியங்கா எங்களுக்கு பிடிக்கும் என்றும் இந்த சீசனின் போட்டியாளர்கள் அனைவரும் முரட்டுத்தனமாக வும், பழிவாங்கும் குணத்துடனும் இருப்பதாகவும் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கு ஆண்டவர் மீண்டும் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று சொல்வதோடு ப்ரோமோ முடிகிறது. மக்களின் தீர்ப்பின் மூலமாகவே வெளியேற்றங்கள் நடைபெறுகிறது என்று கூறும் கமல்ஹாசன், அபிஷேக் வீட்டிற்குள் வந்த பிறகு எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கூறுவது சற்றும் பொருத்தமில்லை.

இதைப் பார்க்கும் ரசிகர்கள் இனி நாங்கள் ஓட்டு போட மாட்டோம் என்றும், ஓட்டுப்போட்ட எங்களுக்கு மதிப்பு இல்லையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4