ஸ்ருதியும் அல்ல, சூர்யாவும் அல்ல - பிக்பாஸ் தொகுப்பாளர் இவர் தான்

Prasu
4 years ago
ஸ்ருதியும் அல்ல, சூர்யாவும் அல்ல - பிக்பாஸ் தொகுப்பாளர் இவர் தான்

பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது அது குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் தனது ஒளிபரப்பை தொடங்கியது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் 5-ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 4 சீசன்களைப் போல இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நடிகர் கமல் ஹாசன் சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் தெரிவித்தார். இதனால் தன்னை மருத்துவமனையில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் கமல். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் அடுத்ததாக தொகுத்து வழங்குவார்களென்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

கமலுக்கு பதில் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் எனக் கூறப்பட்டது. அதே நேரத்தில் நடிகர் சூர்யா அல்லது நடிகை ரம்யா கிருஷ்ணனும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன், நலமுடன் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

அதோடு அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். வெகு விரைவில் அனைவருடனும் பேச நடிகர் கமல்ஹாசன் ஆவலோடு காத்திருப்பதாகவும் ஸ்ருதி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி, மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ கான்பரென்சிங் மூலம் கமல் ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும், அதைத்தான் ஸ்ருதி சூசகமாக குறிப்பிட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4