''ஐபிஎல் 15-வது தொடரின் அடுத்த ஆண்டிற்கான போட்டியில் இரண்டு புதிய அணிகள்''

Prabha Praneetha
4 years ago
''ஐபிஎல் 15-வது தொடரின் அடுத்த ஆண்டிற்கான போட்டியில் இரண்டு புதிய  அணிகள்''

உலகளாவிய ரீதியில்  உதைபந்தாட்டத்திற்கு அடுத்ததாக அதிக ரசிகர்களைக்கொண்ட  விளையாட்டு  மென்பந்தாடமே.
அதுவும் இந்தியாவை அண்டிய பாகிஸ்தான், பங்களாதேசு போன்ற நாடுகளில் உயிருக்கு உயிரான  விளையாட்டாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் , ஐபிஎல் 15-வது தொடரின் அடுத்த ஆண்டிற்கான போட்டியில் புதிதாக இரண்டு அணிகள் இணைவதும், அந்த அணிகளான அகமதாபாத், லக்னோ அணிகளுக்கு வீரர்களை தேர்வுசெய்வதில் கடும் போட்டி நிலவுவதாக தெரிகிறது.

இந்த நிலையில், சென்னை அணிக்கான வீரர்களை தக்க வைப்பதில், நால்வரில், மகேந்திர சிங் டோனியை அடுத்த மூன்று வீரர்களாக ஜடேஜா, ருதுராஜ், மற்றும் பாப் டூப்ளிசிஸ் தக்க வைக்கப்படுவதாக தெரிகிறது.

ஆனால், ரசிகர்களால், சின்ன தல என அன்போடு அழைக்கப்படும் ரன் குவிக்க திணறுவதால் அவரை அணியை விட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளார். ஏலத்தின் மூலம் சென்னை அணிக்கு திரும்பவும் பெரிய வாய்ப்பு இருக்கிறது.

மேலும், சுரேஷ் ரெய்னா அப்படி சென்னை அணிக்கு செல்லவில்லை என்றால், புதிய அணிகளில் கேப்டனாக செயல்படுவார் என கூறப்படுகிறது.

ஒரு காலக்கட்டத்தில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த சுரேஷ் ரெய்னா இப்படி அணிக்கு தக்க கூட வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது ரசிகர்களிடையே சோகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. 

இதற்க்குள் அரசியல் விழையாடுகிறது எனவும், அது தவறு அப்படி ஒன்றும் இல்லை எனவும் விவாதமாக மாறியுள்ளது. எதற்க்கும் பொறுமையாக இருந்தால் உண்மை விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4