பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போகும் நபர்

Prabha Praneetha
4 years ago
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போகும் நபர்

சமீபகாலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து வருகிறது.

புது போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்துள்ளது ஆட்டத்தை இன்னும் சூடு பிடிக்கத் செய்துள்ளது.

எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அடிக்கடி கூறுவார். அந்த வகையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் பிக்பாஸில் நடந்துள்ளது.

அதாவது ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாக்குகளை அளிப்பார்கள்.

சில நேரங்களில் ரசிகர்கள் விரும்பும் போட்டியாளர்கள் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறுவார்கள்.

சில நேரங்களில் ரசிகர்கள் யாரை வெளியே அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் வெளியேறுவார்கள். கடந்த சீசன்களிலும் இதுபோல் நிறைய முறை நடந்துள்ளது.

அந்த வரிசையில் இந்த வாரமும் ரசிகர்கள் தாங்கள் விரும்பும் போட்டியாளர்களுக்கு தங்கள் வாக்குகளை அளித்து வந்தனர்.

அதில் எப்போதும் போல தொகுப்பாளினி பிரியங்கா அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து இமான் அண்ணாச்சி, ஐக்கி, பவானி ரெட்டி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

கடைசி இரண்டு இடத்தில் தாமரைச்செல்வி மற்றும் நிரூப் இருவரும் இருந்து வருகின்றனர். இதில் நிரூப் நேற்று வரை கடைசி இடத்தில் இருந்தார்.

ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்று நிரூப் 81,041 வாக்குகளை பெற்றுள்ளார். தாமரைச்செல்வி 80,767 ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளார். தாமரைச்செல்வி நிரூப்பை விட 274 ஓட்டுக்கள் குறைவாக பெற்றுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4