இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 02-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 02-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நண்பன்

நண்பனுக்கு கடன்
கொடுத்தால் ஒன்று
நண்பனை இழப்பாய்....!!!

இல்லையென்றால்
பணத்தை இழப்பாய்....!!!!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-பணம்

பணம்
நிம்மதி தராது
என்று எந்த ஏழையும்
சொன்னதில்லை....
நிம்மதி தராத
அந்த பணத்தை
இழக்க
எந்த பணக்காரனும்
தயாராக இல்லை...!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வாழ்க்கை

விடை தெரிந்த
கேள்விகளுடன்
துணிவதல்ல வாழ்க்கை
விடை தெரியாத 
கேள்விகளுக்கும்
விடை சொல்ல
துணிவதே வாழ்க்கை

பொன்மொழி - 04 -

தலைப்பு:-கடன்

கடன் கொடுத்துப்பார்
நீ எந்தளவிற்கு
முட்டாள் என்று
ஊருக்கே தெரியும்....!
கடன் கேட்டுப்பார்
ஊரில் உள்ளவர்கள்
எவ்வாளவு
புத்திசாலிகள் என்று
உனக்கே புரியும்..!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-உள்ளம்

உலகம்
ஒரு பாடசாலை
படித்து
தெரிந்துகொள்

உள்ளம்
ஒரு யாகசாலை
பட்டுத்
தெளிவுகொள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4