கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த திரைப்பட மானியத் தொகையை விடுவித்த தமிழக அரசு

#Tamil Nadu #TamilCinema #LANKA4 #Vijay #ChiefMinister #Fund #Movie #L4
Prasu
1 hour ago
கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த திரைப்பட மானியத் தொகையை விடுவித்த தமிழக அரசு

தமிழ்நாட்டில் குறைந்த பட்ஜெட்டில் தரமான மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரைப்படங்களை உருவாக்கும் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த திரைப்பட மானியத் தொகையை தமிழக அரசு தற்போது விடுவித்துள்ளது.

முதலமைச்சர் விஜயின் உத்தரவின்படி, 224 தமிழ் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு மொத்தம் ரூ.15.68 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசு மானியம் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு தகுதியான 224 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ. 7 லட்சத்திற்கான மானியத் தொகைகளை நேரடியாக வழங்கினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!