ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய நியூசிலாந்து வீரர் சாதனை

Prasu
4 years ago
ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய நியூசிலாந்து வீரர் சாதனை

இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்டில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் வெள்ளியன்று தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 70 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 120, சஹா 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இன்று ஆட்டம் தொடங்கியவுடன் மீண்டும் ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஜாஸ் படேல். மும்பை டெஸ்டில் அவர் இதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். சஹா 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அஸ்வினை முதல் பந்திலேயே போல்ட் செய்தார் அஜாஸ் படேல். இதனால் 224 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

இதன்பிறகு களமிறங்கிய அக்‌ஷர் படேல், மயங்க் அகர்வாலுக்கு நல்ல இணையாக விளங்கினார். இருவரும் நிதானமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார்கள்.

2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 98 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 306 பந்துகளை எதிர்கொண்டு 146 ரன்களும் அக்‌ஷர் படேல் 98 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்து அஜாஸ் படேலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அக்‌ஷர் படேல் சிறப்பாக விளையாடி 128 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் 8 விக்கெட்டுகள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். அடுத்ததாக ஜெயந்த் யாதவ், 12 ரன்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க மும்பை டெஸ்டில் பரபரப்பு ஏற்பட்டது. 9 விக்கெட்டுகளை அவர் எடுத்ததால் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுப்பாரா என கிரிக்கெட் உலகில் ஆர்வம் கிளம்பியது.

சிராஜ் 4 ரன்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளும் அஜாஸ் படேலுக்குக் கிடைத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம் லேகர், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக 10 விக்கெட்டுகள் எடுத்த 3-வது பந்துவீச்சாளர் என்கிற சாதனையை அஜாஸ் படேல் படைத்துள்ளார்.

அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109.5 ஓவர்களில் 325 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4