தடுப்பூசிகளுக்கு காலாவதி காலம் நிர்ணயம்!

Prabha Praneetha
4 years ago
தடுப்பூசிகளுக்கு காலாவதி காலம் நிர்ணயம்!

கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்த நாளில் இருந்து எத்தனை மாதங்கள் பயன்படுத்தலாம் என்பதற்கான காலவரம்பை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இதன்போது தெரிவித்த அவர், “கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்த நாளில் இருந்து எத்தனை மாதங்கள் பயன்படுத்தலாம் என்பதற்கான காலவரம்பை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்துள்ளது.

அதன்படி, கோவேக்சினுக்கு 12 மாதங்களும் கோவிஷீல்டுக்கு 9 மாதங்களும் ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு 6 மாதங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4