அமர்ந்த நிலையில் செய்யும் வஜ்ராசனம்
Prasu
3 years ago
செய்முறை: விரிப்பில் நேராக இரு கால்களையும் நீட்டி அமரவும். பின் ஒவ்வொரு காலாக மடக்கி இரு குதிகால்களில் குதம் படும்படி படத்தில் உள்ளது போல் அமரவும். இரு கைகளையும் மூட்டின் மேல் வைக்கவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கவனிக்கவும். இரண்டு நிமிடங்கள் இருக்கலாம். முதலில் ஒரு நிமிடம் இருக்கவும். பின் தொடர்ந்து செய்யும் பொழுது இரு நிமிடங்கள் இருக்கலாம்.
வஜ்ராசனத்தின் பலன்கள்: மன உறுதி, உடல் உறுதி கிடைக்கும். ஜீரண மண்டலம் நன்கு இயங்கும். குளிர் காலம், மழை காலத்தில் வஜ்ராசனத்தில் அமர்ந்து ஐந்து நிமிடம் மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளியிட்டால் குளிருக்கு ஏற்றபடி சரீரம் தாங்கக்கூடிய சக்தி கிடைக்கும். அதிக குளிரால் தசை சுருக்கம், உடல் நடுக்கம் ஏற்படாது