LPL Match 12 - DLS முறைப்படி Jaffna Kings அணி வெற்றி

Prasu
4 years ago
LPL Match 12 - DLS முறைப்படி Jaffna Kings அணி வெற்றி

இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இன்று (12) இடம்பெற்ற 12 ஆவது போட்டியில் கண்டி வொரியர்ஸ் அணியை தோற்கடித்தது ஜெப்னா கிங்ஸ் அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போடடியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி வொரியர்ஸ் அணி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

டக்வொர்த் லூயிஸ் விதிப்படி ஜெப்னா கிங்ஸ் அணியின் வெற்றி இலக்காக 10 ஓவர்களில் 95 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

கண்டி வொரியர்ஸ் அணி சார்பாக சரித் அசலங்கா ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும் அஹமட் ஷெசாத் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

யாழ் கிங்ஸ் அணி சார்பாக வஹாப் ரியாஸ் மற்றும் சொய்ப் மாலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெப்னா கிங்ஸ் அணி 8 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4