மதிய தூக்கத்தின் நன்மைகள்?

Prasu
4 years ago
மதிய தூக்கத்தின் நன்மைகள்?

மதியம் நல்ல உணவுக்குப் பின் குட்டித் தூக்கம் போடும் பழக்கம் தற்போது பலரிடமும் உள்ள ஒரு பழக்கம் . மதியம் தூங்குவதால் இரவு தூக்கம் தடைபடுகிறது என்ற புலம்பல்களும் கேட்க முடிகிறது.

இதற்கிடையே பலருக்கும் மதியம் தூங்குவது உடல் எடையை அதிகரிக்குமோ என்ற பயம் உள்ளது. வீட்டிலும் பெரியவர்களும் கூட தூங்கினால் எடை கூடும் என சொல்வார்கள்.

ஆனால் இது கட்டுக்கதை என்கிறது ஒரு ஆய்வு. ஆம், உண்மையில் மதியம் தூங்குவது உடல் எடையை அதிகரிக்காதாம். இன்னும் கேட்டால் உடல் எடை குறையும் என்கிறது அந்த ஆய்வு.

இதனால் உடலுக்கு நன்மைகளே என்கிறது. Archives of Internal Medicine நடத்திய ஆய்வில் அதிக எடைக் கொண்டவர்கள் தினமும் மதியம் 16 நிமிடங்கள் தூங்கி எழுந்தால் உடல் எடையைக் குறைக்கலாம் என்கிறது.

அதேபோல் A Harvard Medical School நடத்திய ஆய்வில் மதியம் தூங்குவதால் 10% வரை கலோரிகளைக் குறைக்கலாம் என்கிறது. அதோடு நீங்கள் சரியாகத் தூங்கவில்லை என்றால் அதிகம் பசி எடுக்கும் ஹார்மோன்கள் சுரக்குமாம்.

இதனால் அதிகம் சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்கும் என்கிறது. ஆகவே இரவு நல்ல தூக்கம் இல்லை, சரியாகத் தூங்கவில்லை என்றால் கொஞ்சமும் யோசிக்காமல் மதியம் ஓய்வாக சிறிது நேரம் தூங்கி எழுதல் தவறில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4