LPL Match15 - சீக்குகேவின் அதிரடி ஆட்டத்தால் Colombo Stars வெற்றி

#Srilanka Cricket
Prasu
4 years ago
LPL Match15 - சீக்குகேவின் அதிரடி ஆட்டத்தால் Colombo Stars வெற்றி

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் கென்டி வொரியர்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் கொழும்பு ஸ்டார் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கென்டி வொரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 146 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் Kennar Lewis அதிகபட்சமாக 62 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் துஷ்மந்த சமீர 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் தினேஸ் சந்திமால் அதிகபட்சமாக 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இப்போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சீக்குகே பிரசன்ன போட்டியின் இறுதித் தருணத்தில் 6 பந்துகளுக்கு 32 ஒட்டங்களை விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார்.

5 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4