இன்றைய வேத வசனம் 21.12.2021

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 21.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, (எபி 12:2)

இனிவரும் மகிமையை உங்கள் மனக் கண்முன் நிறுத்தும் போது, இக்காலத்துப் பாடுகள் ஒன்றுமில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

நித்திய காலமாய் கிறிஸ்துவின் மார்பில் மகிழப்போகும் ஆனந்தத்தை நீங்கள் எண்ணும்போது, சிலுவை சுமப்பதை உங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்று கருதுவீர்கள். பெரிதல்ல, இப்பத்துநாள் பாடுகளே! என்று ஆனந்தமாய் பாட முடியும்!

நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். (வெளி 2:0)

பவுல் அப்போஸ்தலன் எழுதுகிறார்:- நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன்... (2 கொரி 11:23-28). என்று தொடர்ந்து தன் பாடுகளைச் சொல்லிக் கொண்டே வருகிறார்.

இவற்றையெல்லாம் அந்த தேவ மனிதன் பொறுமையாய் சகித்ததின் இரகசியம் என்ன? தனக்கு முன் வைத்திருந்த சந்தோசத்தின் மேல் பரிபூரணமாக சார்ந்து கொண்டதுதான்! இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; (2 தீமோ 4:8)

தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். (2 கொரி 5:1). தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக்.. தமது ஆவியினால் வெளிப்படுத்தினார் (1 கொரி 2:9)
தேவஜனமே கர்த்தர் தாமே தன் கரத்தால் உங்கள் கண்ணீர் யாவையும் துடைத்தருளுவார்! அவரோடுகூட பாடு சகிக்கிறவர்கள், அவரோடு அரசாளுவார்கள்!

ரோமர் 8:17
நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.

ஆமென்.