லிட்ரோ மீது வழக்குத் தொடர எந்த காரணமும் இல்லை: வெடிப்புச்சம்பவங்களுக்கு உபகரணங்களே காரணமாம்...!

#Litro Gas
Prathees
2 years ago
லிட்ரோ மீது வழக்குத் தொடர எந்த காரணமும் இல்லை: வெடிப்புச்சம்பவங்களுக்கு  உபகரணங்களே காரணமாம்...!

எரிவாயு அடுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் ரெகுலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் தரமற்றவை காரணமாகவே வெடிப்புச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து சமரகோன், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா ஆகியோர் கலந்து கொடனர்.

லிட்ரோ எரிவாயுவின் கலவையில் மாற்றம் இல்லை எனவும் இது தொடர்பில் வெளிநாட்டு நிபுணர்களிடம் இருந்து பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வாயு கசிவு மற்றும் வெடிப்புகளுக்கு வாயு கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என சில தரப்பினர் கருத்து தெரிவித்தாலும்இ இதுவரை பதிவாகியுள்ள சம்பவங்கள் எதுவும் வாயு கலவையில் ஏற்பட்ட மாற்றத்தால் ஏற்படவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

எரிவாயுவின் தரம் காரணமாக அவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் ஒருவருக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி வழங்குவதற்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எரிவாயு அடுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் ரெகுலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் தரமற்றவை என தெரியவந்துள்ளதுடன், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் அடுத்த மூன்று மாதங்களுக்குள் பிரச்சினைக்கு பூரண தீர்வை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தரமான உபகரணங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு பொதுமக்களுக்கு உள்ளது என  அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்தார்.

அங்கீகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வெளியிடப்படும் எனவும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை எனவும் லித்தோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

விஷவாயு கசிவு மற்றும் வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கேஸ் அடுப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் தரமற்ற மற்றும் முறையற்ற பாவனையினால் பெரும்பாலான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், எனவே எந்தவொரு சம்பவமும் குற்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படாததால் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். ..