உலக சந்தையில் எண்ணெய் விலை குறையும் போது இலங்கையில் எண்ணெய் விலை ஏன் அதிகரிக்கிறது?

#SriLanka #prices
Prathees
2 years ago
உலக சந்தையில் எண்ணெய் விலை குறையும் போது இலங்கையில் எண்ணெய் விலை ஏன் அதிகரிக்கிறது?

உலக சந்தையில் கூட எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் வேளையில் தற்போதைய அரசாங்கம் எண்ணெய் விலையை அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிதியமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் எரிபொருளின் விலையை அதிகரிக்க முடியும்.

உலகளாவிய தொற்றுநோய் இருந்தபோதிலும்இ உலக சந்தையில் எண்ணெய் விலை இன்னும் குறைவாக உள்ளது. சீனாவும் இந்தியாவும் தங்களது எண்ணெய் இருப்பில் ஒரு பகுதியை சந்தைக்கு விடுவிப்பதே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு அதிகாரபூர்வ டொலரின் மதிப்பு 203 ரூபாய் என கணக்கிடப்பட்டால், இந்த வருடம் டிசம்பரில் இலங்கைக்கு பெட்ரோல் 92 மற்றும் 95 ஒரு பீப்பாய்  85 டொலருக்கு இறக்குமதி செய்யப்பட்டது.
 
டிசம்பர் 15 நிலவரப்படிஇ டாலரின் மதிப்பு 84.81 - 87.26 ஆக இருந்தது. அதாவது சராசரி பீப்பாய் 17இ255 ரூபாவாக விற்பனையானது என அவர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான பிரேரணை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முன்வைத்த பிரேரணை எனவும், கூட்டுத்தாபனத்தினால் இந்த பிரேரணை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.