இன்றைய வேத வசனம் 22.12.2021

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 22.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; (மத்தேயு 27:19)
பிலாத்துவின் மனைவி ஒருத்தி மட்டும் தான், இயேசு கிறிஸ்து மரண தண்டனை அடையாதபடி, தன்னால் இயன்ற பிரயாசம் எடுத்தவள்.

சரித்திரம் இவளது பெயரை கிளாடியா புரோக்கியுலா என்று கூறுகிறது. கானானிய சபையானது, இவளை பரிசுத்தவான்களின் பட்டியலில் சேர்த்து கௌரவித்துள்ளது.

தன் கணவனாகிய பிலாத்து நீதி ஸ்தலத்தில் வீற்றிருக்கிறார். அவன் முன் நீதிக்காக நிற்பவர் தான், அகில உலகத்தை நியாயத்தீர்க்கப் போகிற மாபெரும் நீதிபதியான, இயேசு கிறிஸ்து.

சொப்பணத்தின் மூலம் தேவ எச்சரிக்கை பெற்ற பிலாத்துவின் மனைவிக்கு, இயேசு குற்றமற்றவர் என்பது மட்டுமல்ல, அவர் ஒரு நீதிமான் என்பதும் தெரியும். அவர் விடுதலையாகபட வேண்டுமே, என்ற கவலையும் உள்ளத்திலே எழுந்தது.

நீயாயாசனத்தில் தன் கணவன் வீற்றிருக்கும்போது, தானோ மற்றவர்களோ யாரும் அருகில் சென்று காதில் இரகசியம் பேசக்கூடாது என்பதை அறிந்திருந்தும், அதையும் மீறி, "அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம்" என்றுச் சொல்லி ஆள் அனுப்பினாள். அந்தோ பிலாத்து செவிசாய்க்கவில்லை

சில வேளைகளில் மனசாட்சி தடுமாறி, மற்றவர்களை பிரியபடுத்த ஒரு தவறான முடிவெடுக்கத் தூண்டப்படும் பொழுது, யார் உண்மையை நீதியை எடுத்துக் கூறினாலும், செவிசாய்க்கத் தயங்காதீர்கள்!

அன்று பிலாத்து தன் மனைவியின் ஆலோசனையைக் கேட்டு நீதியின்படி நடந்திருந்தால், கிறிஸ்துவை பாவிகளின் கைகளில் ஒப்புக் கொடுத்திருக்கமாட்டான்.

சரித்திரம் சொல்லுகிறது, சிறிது காலத்தில் தன் தேசத்தை விட்டுத் துரத்தப்பட்டு குளத்தில் விழுந்து, தற்கொலை செய்துகொண்டு பரிதாபமாய் மரித்தான்.

உபாகமம் 32:4
அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.